திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு தத்தளித்த பூனையை தீயணைப்புத் துறையினர் உயிரை பணயம் வைத்து மீட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு அருகே பழமையான கிணறு ஒன்றுள்ளது. இக்கிணற்றில் தவறுதலாக பூனை ஒன்று தவறி விழுந்துள்ளது.கிணற்றுக்குள்
உயிருக்காக போராடிய பூனையை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி தத்தளித்து கொண்டிருந்த பூனையை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். பூனையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை பல தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் மனிதநேயத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
வேந்தன்







