முதன்முறையாக மின்சார எஞ்சின் பொருத்தி இயக்கப்பட்ட திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயிலை செய்துங்கநல்லூரில் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரையிலான ரயில்வே அகலப்பாதையை மின்மயமாக்கும் பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தன. இதனை தொடர்ந்து மின்சார எஞ்சின் பொறுத்தி சோதனை ஓட்டம்
கடந்த 2 மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது.இதனால் ரயிலின் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் என்பதிலிருந்து 110 கிலோமீட்டராக அதிகரிக்கும்.
இந்நிலையில் இன்று முதல் செந்தூர் ரயில்,பாலக்காடு ரயில் என அனைத்து ரயில்களும் மின்சார எஞ்சின் பொருத்தி இயக்கப்பட்டது. இதனையொட்டி திருநெல்வேலியை அடுத்த செய்துங்கநல்லூரில் செந்தூர் பயணிகள் ரயிலை அவ்வூர் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
—வேந்தன்







