‘தண்டர்காரன்’ ஆக பாட வரும் ஹிப்ஹாப் ஆதி – ‘வீரன்’ பட நியூ அப்டேட்

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்த புதிய அப்டேடினை, அந்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’…

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘வீரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்த புதிய அப்டேடினை, அந்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’ . சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘மரகதநாணயம்’படம் இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாள் அன்று வெளியாகியிருந்ததோடு, பெருத்த வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. குறிப்பாக சூப்பர் ஹீரோ கெட் அப்பில் செம்ம மாஸாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதியின் புகைப்படத்துடன் கூடிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.

இந்நிலையில் இன்று, அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டர்காரன்’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கள் ப்ரமோ ரிலீஸ் குறித்த அப்டேடினை அந்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ”Get ready to
VIBE ,The first single of #Veeran – #Thunderkaaran Promo song is releasing on 31st MARCH ” என
மார்ச் 31ஆம் தேதி ப்ரமோ பாடல் வெளிவரவுள்ள தகவலை குறிப்பிட்டு, வீரன் படத்தின் ஒரு மாஸான போஸ்டரையும் இணைத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே, அன்பறிவு படத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ள ஹிப்ஹாப்
ஆதி. தற்போது மீண்டும் ‘வீரன்’ படத்தில் இணைந்துள்ள நிலையில், இந்த படம் கோடை விடுமுறையில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது.

https://twitter.com/SathyaJyothi/status/1641040043090358275?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.