நேரம் தவறாத பாஜக தலைவர்! அக்‌ஷய் குமாரால் ஈர்க்கப்பட்டதாக கூறி சுவாரஷ்ய ட்வீட்!

நாகாலாந்து மாநில அமைச்சர் டெம்ஜென் இம்னா அலங், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரால் ஈர்க்கப்பட்டதாகக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது. நாகாலாந்து மாநில பாஜக தலைவரும், அமைச்சருமான…

நாகாலாந்து மாநில அமைச்சர் டெம்ஜென் இம்னா அலங், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரால் ஈர்க்கப்பட்டதாகக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.

நாகாலாந்து மாநில பாஜக தலைவரும், அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலங் எப்போதுமே தனது சமூக ஊடக பக்கங்களில் ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அதிலும் குறிப்பாக, இவர் போடுகிற பதிவில் நகைச்சுவை உணர்வும், நையாண்டி தனமும் அதிகம் இருப்பதால் பலரும் அதனை படித்து மகிழ்வதோடு, அதிகம் பகிரவும் செய்வர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர் தனியாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, விழாக்களுக்கு முன்னதாக வரும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரால் ஈர்க்கப்பட்டதாக கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ட்விட் செய்திருந்தார்.

காரணம் பொதுவாகவே அக்‌ஷய் குமார் நேரத்தை கடைப்பிடிப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர் மற்றும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் நேரத்திற்கு சற்று முன்னதாகவே சென்றடையும் பழக்கமும் அவருக்கு அதிகம் உண்டு. இதனால் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாகவே தான் வந்து விட்டதை உணர்த்தும் விதமாகவும், அக்‌ஷய் குமாரை பாராட்டும் விதமாகவுமே டெம்ஜென் இந்த ட்விட்டை பதிவு செய்திருந்தார்.

https://twitter.com/AlongImna/status/1645996662916108290?s=20

இதில் குறிப்பாக, “தேகோ ! நான் விஐபி இல்லை, பார்வையாளர்களை விட முன்னதாகவே வந்து விட்டேன். @அக்ஷய்குமாரால் ஈர்க்கப்பட்டவர்” என கூறி அக்‌ஷய் குமாரையும் இதில் டேக் செய்திருந்ததால், இந்த பதிவை பார்த்த அக்‌ஷய் குமார் பதிலுக்கு “ஹாஹா! நன்றி. உங்கள் நகைச்சுவை உணர்வால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் “என குறிப்பிட்டிருந்தார்.

இப்படி பிரபல நடிகருக்கும் நாகாலாந்து அமைச்சருக்கும் இடையே நடந்த வேடிக்கையான வார்த்தைப் பரிமாற்றம் பலரையும் கவர்ந்ததால் அதிக பகிரப்பட்டு வைரலானதை தொடர்ந்து, பலரும் தங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியோடு பதிவிட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் அக்‌ஷய் குமாருக்கு பதிலளித்த டெம்ஜென் ” நன்றி அக்‌ஷய் குமார் ஜி, நான் உங்கள் உடற்தகுதியைப் பின்பற்றுபவன், ஆனால் என்னால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை, ஏதேனும் வழிகாட்டுதல் இருக்கிறதா ?” என கேள்வி எழுப்பியுள்ளார். காரணம், பொதுவாகவே டெம்ஜென் நன்கு சாப்பிட்டு குண்டாக இருக்கக் கூடிய நபர். மேலும் பலமுறை அவர் உணவு சாப்பிடும் போது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனால் டெம்ஜெனின் இந்த வேடிக்கையான கேள்விக்கும் பல நகைச்சுவையான கருத்துக்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.