“தேசிய அளவில் சனாதன தர்ம ரக்சனா வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது”| #PawanKalyan

கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார் ஆந்திராவில் கடந்த 5…

"Time has come to set up Sanatana Dharma Raksana Board at national level" - Andhra Deputy Chief Minister #PawanKalyan

கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்

ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ் ஷர்மிளா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து நேற்று லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டது. அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் பாமாயில் எண்ணெய் கலந்து இருப்பதும்
உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:

‛‛திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதத்தில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வடிவதத்திலும் இழிவுப்படுத்தக்கூடாது.

இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் இதுதொடர்பாக பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.’’

இவ்வாறு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.