”தேவையற்ற சூழல்களை தவிர்ப்பதற்காக அஜித் வராமல் இருந்திருக்கலாம்” – சரத்குமார்

துணிவு பட கொண்டாட்டத்தின்போது ரசிகர் உயிரிழந்த விவகாரம் நடிகர் அஜித்தின் கவனத்திற்கு நிச்சயம் சென்றிருக்கும் என்றும், தேவையற்ற சூழல்களை தவிர்ப்பதற்காக அவர் வராமல் இருந்திருக்கலாம் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.…

துணிவு பட கொண்டாட்டத்தின்போது ரசிகர் உயிரிழந்த விவகாரம் நடிகர் அஜித்தின் கவனத்திற்கு நிச்சயம் சென்றிருக்கும் என்றும், தேவையற்ற சூழல்களை தவிர்ப்பதற்காக அவர் வராமல் இருந்திருக்கலாம் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் பரத், துணிவு பட கொண்டாட்டத்தின்போது லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், இளைஞரின் குடும்பத்திற்கு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அப்போது தம்மால் இயன்ற உதவியை குடும்பத்திற்கு செய்வதாக உறுதி அளித்த அவர், பரத் சகோதரரின் கல்வி கட்டணத்திற்கு உதவி செய்வதாகவும் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உயிரிழந்த மாணவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொகுதியை சேர்ந்தவர் என்பதால் அவர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது ரசிகரின் மரணம் நிச்சயம் நடிகர் அஜித்தின் கவனத்திற்கு சென்றிருக்கும் என்றும், தேவையற்ற சூழல்களை தவிர்ப்பதற்காக அவர் வராமல் இருந்திருக்கலாம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.