பட்டு பட்டுனு அடிங்கப்பா…. – துரைமுருகன் ஆவேசம்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எம்எல்ஏக்கள் அதிக நேரம் எடுத்து கொள்வதாகவும், தான் சொல்ல வரும் கருத்துக்களை பட்டு பட்டுனு சொல்ல வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.   தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று…

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எம்எல்ஏக்கள் அதிக நேரம் எடுத்து கொள்வதாகவும், தான் சொல்ல வரும் கருத்துக்களை பட்டு பட்டுனு சொல்ல வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியதும், இந்து சமய அறநிலையத்துறை தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கையின் விவாதம் நடைபெற்றது. அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் மீன்வளக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என போளூர் எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேரவையில் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துப் பேசினார். பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும், ஆம் இல்லை என்றும் பதில் அளிக்கிறார்கள். ஆனால் எம்.எல்.ஏக்கள் அடுத்து பேசும்போது சுருக்கமாக பேசாமல் நீண்ட நேரம் எடுத்து கொள்வதாக சாடினார்.

பேரவையில் கேள்வி நேரத்தில் எம்எல்ஏக்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும், கேள்விகளை எம்.எல்.ஏக்கள் பட்டு பட்டுனு அடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இந்த அறிவுரை எல்லா எம்.எல்.ஏ.க்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.