அஜித் குமார் நடித்து வரும் திரைப்படமான ‘துணிவு’ வரும் 2023 பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு ‘துணிவு’ எனபடக்குழு தலைப்பிட்டுள்ளது . ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படமான ‘துணிவு’ வரும் 2023 பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து விஜய், அஜித் ரசிகர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.







