குடும்பத்துடன் பெண் கேட்டு வந்தபோது மாப்பிள்ளை வீட்டாருக்கு பெற்றோர் மனகசப்பு ஏற்படுத்தியதால், காதலனை விடாபிடியாக காதலி துரத்தி வந்ததால் – ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கோவிலூற்று கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் சுந்தரி (24). திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் சுந்தரி வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த குமார் (26) என்பவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தீபாவளிக்கு ஊருக்கு வந்த சுந்தரி தன்னை பெண் பார்க்க வரும்படி காதலனிடம் கூறியுள்ளார். குமாரும் தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு கோவிலூற்றுக்கு ஆம்னி வேனில் வந்திருந்தார்.
குமார் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டாருக்கு இவர்களது திருமணத்தில் சம்மதம் இல்லை. இதனால் பெண் கேட்டு வீட்டுக்கு வந்தவர்களுடன் சண்டை போட்டு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் விரக்தி அடைந்த குமார் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டாா்.
தனது பெற்றோரின் செய்கையால் அதிர்ச்சியடைந்த சுந்தரி ஆட்டோவில் தன் காதலனை பின்தொடர்ந்து வந்தார். ஆலங்குளம் பஸ் நிலையத்தில் காதல் ஜோடி சந்தித்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பை மீறி விடாப்பிடியாக சுந்தரி தன் காதலனுடன் திருப்பூர் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இருவரது வாக்குவாதத்தை கேட்டு ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காதல் ஜோடியை சமரசம் செய்தனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு தன் குடும்பத்தினருடன் வந்த காரில் குமார் தன்
காதலியையும் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் ஆலங்குளத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியது.








