மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருமானம் எவ்வளவு தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் கட்டணம் மூலம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் கட்டணம் மூலம் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டிய வருமானம் குறித்து அக்கோயில் நிர்வாகம் வெளியிட்ட ஆர்டிஐ தகவலில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆகிய மூன்று ஆண்டுகளில் சிறப்பு தரிசனம் மூலம் 40 லட்சத்து 86 ஆயிரத்து 507 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

சிறப்பு தரிசனம் மூலம் மட்டும் கோயிலுக்கு சுமார் 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு, செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டதின் காரணமாக கோயிலுக்கு வருமானமாக 4 கோடியே 55 லட்சத்து 67 ஆயிரத்து 635 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக.” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.