நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்பு 3,03,16,897 ஆக உள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 56,994 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 2,93,66,601 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது 5,52,659 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 907 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை மொத்தம் 3,97,637 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 52,76,457 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 32,90,29,510 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.







