“விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் விரைவில் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி,…

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் விரைவில் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும், அதற்கான கட்டமைப்பு கடந்த ஆட்சியில் ஏற்படுத்தாத நிலையில் திமுக தலைமையிலான அரசு மின் கட்டமைப்புக்கான பணிகள் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய 216 துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 87,465 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இணைப்புகளும் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.