நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக 2025-l வெளியான திரைப்படம் குட், பேட், அக்ளி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே பெரும் அவரவேற்பை பெற்று வசூலை அளிக்குவித்தது. இதனைத்தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் அஜித் சிறிது காலம் சினிமாவிற்கு ஓய்வளித்துவிட்டு கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் நடிகர் அஜித் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகுயுள்ளது. அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் 64-வது திரைப்படம் (AK64) ஆகஸ்ட்டு மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும், டிசம்பருக்குள் படபிடிப்பை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2027 ஜனவரி மாதமும், சிறுத்தை சிவா இயக்க உள்ள படம் 2027 கோடையிலும் படபிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




