பெண் ஆசிரியையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தபள்ளியில் அடைக்கப்பட்டனர்.
வடபழனி திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு 20ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் அங்கு உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் தகாத முறையில் நடப்பதாக குற்றசாட்டு எழுந்தது.
மேலும் ஆசிரியை மற்றும் பள்ளி மாணவிகள் கழிவறை செல்லும்போது கழிவறையில் வெளிப்புறமாக பூட்டிவிட்டு செல்வதும், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வது என தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் மூன்று மாணவர்கள் மீதும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டியின் ஆலோசனைப்படி விசாரணை நடைபெற்று வந்தது. மாணவர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, மாணவர்கள் மூன்று பேரையும் கைது செய்ய கெல்லிஸ் இளைஞர் நீதிமன்றக் குழு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாணவர்கள் மீது தலைமையாசிரியரே புகார் அளித்திருந்த நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் மாணவர்கள் கைது செய்யபட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







