இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியானது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள சில திரையரங்குகளில் சிறப்பு காட்சியாக பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பப்பட்டது. அப்போது நெல்லையில் உள்ள ராம் திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டது.
அண்மைச் செய்தி: நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
இது குறித்து ஆடியோ வெளியிட்டுள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரச்னைகள் ஏற்படும்போது திரையரங்கத்தின் உரிமத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: