முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் சித்திரைத் திருவிழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரையில் சித்திரைத் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழா உலக அளவில் புகழ்பெற்றது. இந்த திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 14-ஆம் தேதியும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 16-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. சித்திரை திருவிழாவை முன்னிட்டு நான்கு மாசி வீதிகளிலும் 35-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுக்கவே தலைநகருக்கு சென்றேன்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும், இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களை சிசிடிவி மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ள காவல்துறை, ட்ரோன் கேமராக்கள் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. திருவிழாவின்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மதுரை சித்திரை விழாவை நேயர்கள் அனைவரும் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நியூஸ் 7 தமிழில் நேரலையாக காணலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கையில் கைதான தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை- ஜி.கே.வாசன்

G SaravanaKumar

வினாதாள் வெளியான விவகாரம்: கல்வி அலுவலர் மாற்றம்

G SaravanaKumar

புற்றுநோயிலிருந்து மீண்ட நடிகரின் உருக்கமான பேட்டி

EZHILARASAN D