வருண் குமார் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்….!

தமிழ் நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தமிழ் நாட்டில் நிர்வாகரீதியாக அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :

  1. சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி-யின் காவல் துணைத் தலைவரான டாக்டர் வி. வருண் குமார், ஐ.பி.எஸ். அவர்கள், ஈரோடு சிறப்பு அதிரடிப்படையின் காவல் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
  2. தற்போது கட்டாயக் காத்திருப்பில் உள்ள காவல் துறை துணைத் தலைவர் (DIG) வி. விக்ரமன், ஐ.பி.எஸ். சென்னை, குற்றப்பிரிவு சி.ஐ.டி. (Crime Branch CID) காவல் துறை துணைத் தலைவராக (டாக்டர் வி. வருண் குமார், ஐ.பி.எஸ். அவர்களுக்குப் பதிலாக) நியமிக்கப்படுகிறார்.
  3. கட்டாயக் காத்திருப்பில் உள்ள காவல் கண்காணிப்பாளர் பி. ரகுபதி, ஐ.பி.எஸ்., தற்போது தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பல்லிக்கரணை பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.