முதலமைச்சர் விஜயுடன் நடிகர்கள் அதர்வா, கவின் சந்திப்பு…!

முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் ஆகியோர் தனித்தனியாக சந்தித்துள்ளனர்.

தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை பல்வேறு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் ஆகியோர் முதலமைச்சர் விஜயை தனித்தனியாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பு குறித்து நடிகர் கவின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “சிலர் இயல்பாகவே மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பவர்களாகத் திகழ்கிறார்கள். காலம் அவரது பயணத்தை மாற்றியிருக்கலாம்; ஆனால் அவரது பணிவு, எளிமை அல்லது கனிவு ஆகியவற்றை ஒருபோதும் மாற்றவில்லை :). லட்சக்கணக்கானோரைப் போலவே நானும் அவரைத் திரையில் பார்த்து வளர்ந்தேன்; இப்போது அவர் தமிழகத்தின் முதலமைச்சராக மக்களுக்குச் சேவை செய்வதைக் காண்பது தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றி நினைவுகூரும் தருணம் இது. பல ஆண்டுகளாக நான் கொண்டிருந்த ஒரு விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி, @Jagadishbliss அண்ணா” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அதர்வா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தது எனக்குக் கிடைத்த பெருமையும் மகிழ்ச்சியும் ஆகும். என்னைப் பொறுத்தவரை, அவர் என்றும் நம்முடைய சொந்த ‘விஜய் அண்ணா’ தான். அந்த முக்கிய நாளுக்கு (BIG DAY) சற்று முன்பு அவரது அன்பையும் ஆசியையும் பெற்றது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி, அண்ணா. இதைச் சாத்தியமாக்கிய @Jagadishbliss அவர்களுக்குச் சிறப்பான நன்றிகள். உண்மையிலேயே நெகிழ்ச்சியாகவும், மிகுந்த நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். மிகுந்த நேர்மறை உணர்வுடன் உணர்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.