தமிழ் நாட்டில் இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழ் நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.