தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழகத்தின் நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதில் பங்கேற்காமல் இருக்கலாம்.
ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும் அரசியலுக்கு அடுத்த இடமும் அளிப்பவர்கள், தமிழக முதல்வர் அவர்கள் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள்.
இது கட்சி அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல.
இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் சார்ந்தது.
தமிழக மக்கள் அனைத்தையும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்; இக்கட்டான சூழலில் தமிழகத்துடன் உறுதியாக நின்றது யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




