முக்கியச் செய்திகள் தமிழகம்

பாரத் மாதாகீ ஜே மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம்- முரசொலி

இன்னமும் பாரத் மாதாகீ ஜே என்பதை மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம் நடத்துகிறார்கள் என காசி தமிழ்ச் சங்கமம் குறித்து முரசொலி விமர்சித்துள்ளது

2017-20 இல் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.643 கோடி, தமிழுக்கு ஒதுக்கப்பட்டத் தொகை ரூ.23 கோடிக்கு ரூ.6 இலட்சம் குறைவு. இவர்கள் தான் தமிழ்ச் சங்கமம் நடத்துகிறார்களாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேர் வெற்றி பெற்று வந்தால் போதும் என்று அமித்ஷா கட்டளையிட்டிருக்கிறாராம். அதற்குத் தான் இந்தப் பாடும், பாட்டும். அதற்காக இங்கிருந்து ஆட்களை உத்தரப்பிரதேசம் அழைத்துப் போகத் தேவையில்லை. தற்காக காதைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்?

உலகப் பொதுமறையான திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்கப்படுகிறது. ஒன்றியப் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும்.

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும். சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் ஏற்கப்படும். கேந்திரிய வித்தியாலயா முதல் ஐ.ஐ.டி. வரையிலான நிறுவனங்களில் தமிழும் பயிற்று மொழி ஆக்கப்படும். ஆகிய ஆறு அரசாணைகளில் கையெழுத்துப் போட்டாலே போதும் தனித்து நின்றால் பிணைத்தொகையாவது தப்பும்.

காசிக்கு இராமசாமியாகப் போனவர் தான் எங்களுக்குப் பெரியாராகத் திரும்பி வந்தார், என்பதையெல்லாம் இவர்கள் அறியமாட்டார்கள். இவர்கள் சொல்லும் பாரதி கூட, காசிக்குப் போன பிறகு தான் சீர்திருத்தம் பேசத் தொடங்கினார் என்று அவர்தம் மனைவி செல்லம்மாள் பாரதி எழுதி இருக்கிறார்.

120 ஆண்டுகள் கழிந்த பிறகும் இவர்கள் மாறவில்லை. அங்கவஸ்திரம் தான் போடுகிறார்கள். இன்னமும் பாரத் மாதாகீ ஜே என்பதை மாற்றத் தயாராக இல்லாதவர்கள் தமிழுக்குச் சங்கமம் நடத்துகிறார்களாம்.

இதைத்தான் வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!! என்கிறான் பாரதி என்று திமுக முரசொலி நாளேடு தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் 549 மனுக்களுக்குத் தீர்வு!

Halley Karthik

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு: 3 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை

G SaravanaKumar

மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்த கணவன்

Web Editor