நேபாள தேர்தல்; 60 சதவீத வாக்குகள் பதிவு

நேபாளத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006-ம்…

நேபாளத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான நேபாளத்தில் நீண்டகாலமாகவே அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது. அங்கு கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து எந்தவொரு பிரதமரும் முழு பதவிக் காலம் பணியாற்றவில்லை. இந்த நிலையில் 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதோடு 550 உறுப்பினர்களை கொண்ட 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 1.79 கோடி வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 22 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. விறுவிறு வாக்குப்பதிவு மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர். வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மதியம் 2 மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. எனவே இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இறுதி முடிவுகளை அடுத்த 8 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 60 சதவீத ஓட்டுகள் பதிவானதாக நேபாள தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.