தூத்துக்குடி துறைமுகம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் துறைமுகங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும்,ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள துறைமுகங்கள் முன்பாக ஏப்ரல் 25 அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்கள் சார்பாக அறிவிக்கப்படிருந்தது.
அதன்படி தூத்துக்குடியில் துறைமுகத்தின் சார்பாக அனைத்து தொழிற்சங்களின் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில செயலாளர் ரசல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிடில் வேலை நிறுத்ததில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
—வேந்தன்







