தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தேர் திருவிழா! – சிறப்பு ரயில் இயக்கம்!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தேர் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (08.07.2023) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வேலை நிமித்தமாக…

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தேர் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (08.07.2023) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

வேலை நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் சென்னையில் தான் குவிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் ஊரில் விட்டுவந்த வீட்டையும், உறவுகளையும், நட்புகளையும் பார்ப்பது குடும்ப விழாக்கள் மற்றும் கோயில் திருவிழாக்கள், பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின் போதுதான்.

இப்படி ஊர் செல்ல விரும்புவோரின் முதல் தேர்வு ரயில் தான். ஏனென்றால் பேருந்தோடு ஒப்பிடும் போது கட்டணமும் குறைவு, பாதுகாப்பான, வசதியான பயணம் மேற்கொள்ளலாம். குறிப்பாக பல மணி நேர பயணத்தின் போது உடல் அசதியின்றி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளோடு குறைந்த செலவில் செல்ல ரயிலே சிறந்த தேர்வாக இருக்கிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட திருவிழாக்களில் ஒன்றான பனிமய மாதா பேராலய தேர் திருவிழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த தங்கத்தேர் திருவிழா நடைபெற உள்ளதால் தூத்துக்குடி மக்கள் மட்டுமல்லாது பிற மாவட்ட மக்கள் கூட பனிமய மாதா பேராலயத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக வண்டி எண் 06001 தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டணத்தில் சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து 06 ஆகஸ்ட் 2023 இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09:00 மணிக்கு தூத்துக்குடியை அடையும் (1 சேவை)

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06002 தூத்துக்குடி தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து 6 ஆகஸ்ட் 2023 இரவு 9:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 20 மணிக்கு தாம்பரத்தை அடையும் (1 சேவை) வண்டி எண் 06002 தூத்துக்குடி தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் அரியலூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, மேற்கண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை 2023 ஜூலை 8 காலை 8 மணிக்கு தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.