குடிபோதையில் சாலையில் தாறுமாறாக போலீஸ் காரை ஓட்டி காவலர்களால் கடைக்குள் கார் புகுந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அசோக் நகர் 10வது அவென்யூ வழியாக இன்று மாலை சென்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் மீது மோதி, பின்னர் கார் அலகு பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது.
உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் தாறுமாறாகக் காரை ஓட்டிய இரு காவலர்களையும் தாக்கி குமரன் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் போலீசார் குடிபோதையிலிருந்த இரு காவலரிடம் விசாரித்த போது, ஸ்ரீதர் மற்றும் அருண் மணி என்பது தெரியவந்தது. இவர்கள் அட்மின் ஏடிஜிபி பால நாகஜோதியின் வீட்டில் ஆடலியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. ஏடிஜிபி பாலநாகஜோதி வெளியூரில் இருப்பதால், இன்று இரு காவலர்கள் குடிபோதையில் போலீஸ் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாகக் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




