இணையத்தில் வைரலாகும் “ஒன்னுமில்ல ராசாத்தி” பாடலில் கதாபாத்திரங்களாக நடிகர்-இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் அம்மு அபிராமி காட்சிப்படுத்தப் பட்டுள்ளனர்.
“ஒன்னுமில்ல ராசாத்தி” என்கிற பாடல் வீடியோ ‘சோனி மியூசிக் சொத்’ யூ ட்யூப் சேனலில் இன்று ஜூலை 7 (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க 100 வண்ண ஓவியங்களால் உருவாக்கப்பட்டு அனிமேஷன் செய்யப்பட்டது.
இதில் கதாபாத்திரங்களாக நடிகர்-இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் அம்மு அபிராமி காட்சிப்படுத்தப் பட்டுள்ளனர்.
கோவிட் லாக் டவுன் காலகட்டத்தில் வட மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு கால்நடையாக நடந்து வீடு வந்து சேரும் புலம்பெயர்ந்த தொழிலாளர் பற்றிய கதையைக் கொண்டது இந்த பாடல்.
இதை எழுதி, வடிவமைத்து, இயக்கியது சுகுமார் செ. ஓவியங்கள்: சௌமியா இயல். இசையமைப்பாளர்: குரு பிரசாத். பாடகர்கள் பிரசன்னா ஆதிசேஷா-சௌமியா.
ஓவியங்களால் கதை சொல்லும் வித்தியாசமான முயற்சி, பார்க்கும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இசை அனைவரும் முணுமுணுக்கும் படி தேனிசை என புகழப்பட்டு வருகிறது. பாடல் வீடியோ நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.







