தூத்துக்குடி: முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா-ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்  தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.  இந்த நிலையில்…

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்  தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.  இந்த நிலையில் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் ஆலயத்தில் கடந்த 10
நாட்களாக தசரா திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை தொடர்ந்து அம்பாள் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் சிவன் கோயில் முன்பு எழுந்தருளினார்.

அங்கே முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  இதில்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.  இதை தொடர்ந்து
முத்தாரம்மன் கீழ ரத வீதி மேலரத வீதி ரங்கநாதபுரம் ஆகிய வீதிகளில் பேரணியாக
எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.