தமிழகம் செய்திகள் விளையாட்டு

தூத்துக்குடியில் அகில இந்திய ஹாக்கி போட்டி-சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரிலுள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 16 அணிகள் போட்டிகளில் பங்கேற்பதெற்கென வந்துள்ளன. அணிகளை 4 பிரிவுகளாக பிரித்து லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் தொடங்கியது.

6-வது நாளாக நடைபெற்று வரும் போட்டியின் முதலாவது ஆட்டத்தில் மும்பை யூனியன் பேங்க் அணியும், ஹீப்ளி சவுத் வெஸ்டர்ன் அணியும் மோதின. இதில் 6:1 என்ற கோல் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. மேலும் மற்றொரு ஆட்டத்தில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் அணியும் பெங்களூரு ஸ்போர்ட்ஸ் அணியும் மோதின.இதில் 3;2 என்ற கோல்கணக்கில் நியூ டெல்லி அணி வெற்றி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் சென்னை இந்தியன் பேங்க் அணி,பெங்களூரு கனரா பேங்க் அணியை 3:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும்”- முதலமைச்சர்

Jeba Arul Robinson

ரூ 50,000 க்கு மேல் கொண்டு சென்றால் ஆவணம் காண்பிக்க வேண்டும்: சத்யபிரதா சாகு

Niruban Chakkaaravarthi

காற்று வாங்கப் போனேன்…

Web Editor