முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

’பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான்…’ ‘போராளி சூர்யா’வுக்கு தொல். திருமாவளவன் வாழ்த்து

பொறுமையும் சகிப்புத் தன்மையும்தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள், போராளி சூர்யாவுக்கு வாழ்த்துகள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மை யினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்பிட்டதைப் போல தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கான உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மனநிறைவு தந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும் அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டு தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தொல் திருமாவளவன், கலைநாயகன்_சூர்யா , பழங்குடியினரின் உரிமைப் போராளி Birsa Munda பிறந்த நாளில் நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. பொறுமையும் சகிப்புத் தன்மையும் தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள். போராளி சூர்யாவுக்கு எமது வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உத்தரகாண்டில் திடீர் வெள்ளம்: 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Jeba Arul Robinson

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

Jeba Arul Robinson

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா

EZHILARASAN D