டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்துள்ள, மிகவும் மதிப்புமிக்க அணியில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறின. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.இந்த தொடரில் லீக் தொடரிலேயே வெளியேறி இந்திய அணி ஏமாற்றமளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தொடரில் பங்கேற்ற அணிகளில் சிறப்பாக ஆடிய வீரர்களை கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், மிகவும் மதிப்புமிக்க டி-20 அணி ஒன்றைத் தேர்வு செய்துள்ளது. கிரிக்கெட் வர்ணனையாளர்கள், முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர் ஆகியோர்களின் ஆலோசனைப்படி இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் (ஆஸி), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்- இங்கிலாந்து) சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் சரித் அசலங்கா (இலங்கை), மார்க்ரம் (தென்னாப்பிரிக்கா ), மொயின் அலி (இங்கிலாந்து), வசிந்து ஹசரங்கா (இலங்கை), ஜோஷ் ஹசல்வுட் (ஆஸி), டிரெண்ட் போல்ட் (நியூசி), அன்ரிச் நோர்ஜோ (தென்னாப்பிரிக்கா) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் 12 வது வீரராக ஷாகின் ஷா அப்ரிதி இடம்பெற்றுள்ளார்.
இந்த டீமில், இரு இந்திய வீரர் கூட இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.