இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது அணியாக திகழ்கிறது.
15வது ஐபிஎல் சீசன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் முதல் முறையாக இணைந்தது. முதல் சீசனிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளும் 8 க்கும் அதிகமான வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைத் தக்க வைத்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 10 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி சில ஆட்டங்களில் தடுமாறினாலும் மீண்டு வந்து 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத் அணி முன்னேறியது. தற்போது லக்னோ அணியும் முன்னேறியுள்ளது. தாங்கள் விளையாடிய முதல் சீசனிலேயே பிளே ஆஃப் சுற்றில் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை இரு அணிகளும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.