முக்கியச் செய்திகள் மழை

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதையொட்டிய தமிழக பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி முதல் கள்ளக்குறிச்சி வரையிலான 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தார். மேலும், சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்சம் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல, தென் மாநிலங்களை ஒட்டிய அரபிக்கடல், குமரி கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால், இன்றும், நாளையும் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம்; வெளியானது அரசாணை’

இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த வரக்கூடிய 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 21-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ள சூழலில் 23 தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் – அரசு அதிரடி நடவடிக்கை

Janani

பெண்களின் திருமண வயது 21, அப்போ ஆண்களுக்கு?

Arivazhagan CM

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது: அஸ்வினுக்கு வாய்ப்பு

Saravana Kumar