உதயநிதி வெற்றிக்கு காரணம் அவர் எளிமையாக இருப்பது தான் என கலகத்தலைவன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மகிழ் திருமேனி பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத்தலைவன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், இயக்குநர் மகிழ் திருமேனி, ஶ்ரீகாந்த் தேவா, மிஷ்கின், அருண் விஜய், அருண் ராஜா காமராஜ், சுந்தர் சி, விஷ்ணு விஷால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, ‘இந்த மேடையில் இருக்கும் போது 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்போது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் படம் பண்ண போகிறேன் என்று இருந்தது. இந்த மேடையை நான் நன்றி சொல்லும் மேடையாக தான் பார்க்கிறேன் என்றார்.
மேலும், உதயின் வெற்றிக்கு காரணம் அவர் அவ்வளவு எளிமையாக இருப்பது தான். இந்த வாய்ப்பை கொடுத்த உதய் அவர்களுக்கு நன்றி இந்த படம் உங்களை ஏமாற்றாது. 70 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விடுவேன் என்று சொன்னேன். அது போல படப்பிடிப்பை முடித்து விட்டேன் சொன்ன பட்ஜெட் விட குறைந்த பட்ஜெட் தான் படம் பண்ணேன் என அவர் பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அருண் விஜய் சொன்னது போல தான் படம் சீக்கிரம் எடுத்து விடுவார். ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு ரொம்ப நாட்கள் எடுத்து கொள்வார். ரொம்ப ரொம்ப நேரம் எடுத்து கொண்டார். இந்த படம் பண்ணிவிட்ட பிறகு தான் நெஞ்சுக்கு நீதி படம் பண்ணேன். ஆனால் அந்த படம் வெளியாகி விட்டது. 70 நாட்கள் தான் எடுத்தார். ஆனால் 3 வருடம் ஆகி விட்டது. 3 டேக் தான் அதில் 30 ஆங்கில் உள்ளது. மாமன்னன் அப்டேட்ஸ் கேட்டீர்கள் அல்லவா படம் இன்னும் முடியவில்லை. இது தான் அப்டேட் என கூறினார்.
நவம்பர் 18 கலகத்தலைவன் படம் வெளியாகும் என முடிவு செய்ததால் சீக்கிரம் முடிந்து விட்டது இல்லை என்றால் இன்னும் செதுக்கி கொண்டு இருப்பார். நெஞ்சுக்கு நீதி போல் இந்த படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன் என அவர் பேசினார்.









