உலக வரலாற்றில் இதுவே முதல்முறை-சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அமைச்சர்…

சென்னை சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழக வரலாற்றில் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றால் அதில் மிகை இல்லை. முதலமைச்சர் பதவி ஏற்ற நாளில் இருந்து தொடர்ச்சியாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்கிற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகநலத் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை
என பல துறைகளை ஒன்றிணைத்து தொடர்ச்சியாக போதை பொருள் இல்லாத தமிழ்நாடு, போதை பழக்கங்களில் இருந்து மக்களை மீட்டு எடுக்கும் முயற்சி இப்படி பல்வேறு
நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.

இந்த வகையில் மாவட்ட ஆட்சியாளர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற அந்த கூட்டத்தில் சிறப்பான திடத்ததை அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பள்ளி கல்லூரி நிலையங்களில் உள்ள 30 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி மாணவர்கள் என 30 லட்சம் பேர் பங்கேற்கும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு. இதற்கு உலக மற்றும் ஆசிய சாதனைகளுக்கான சான்றிதழ் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மூலம் நிச்சயம் தமிழகத்தில் மிக பெரிய அளவில்
மாற்றம் பெறும் என நம்பிக்கை உள்ளது. மேலை நாடுகளில் விழிப்புணர்வு காரணமாய் மிக சிறந்த வகையில் போதை தடுப்பு வெற்றி பெற்றுள்ளது. ஆசிய நாடுகளில் தான் குறைந்தபாடில்லை. அதனால் தான் விழிப்புணர்வு பணியை தமிழகத்தில் துவங்கி வைத்துள்ளார்.

2013 தொடங்கிய பான்பராக், குட்கா போன்ற பொருட்களுக்கான தடைக்கு பின் 9
ஆண்டுகளில் 952 டன்கள் கைப்பற்றப்பட்டன. 152.36 டன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பதவி ஏற்ற பின் மட்டும் கைப்பற்றப்பட்டன.

ஆறில் ஒரு மடங்கு இந்த ஓராண்டில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை கைப்பற்றப்பட்டது 39 கோடி. மொத்தம் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு என்றால் அதில் 9 கோடியே 19 லட்சம் அளவு இந்த ஒரு வருடத்தில் கைப்பற்றப்பட்டது.

குற்றவியல் வழக்குகள் கடந்த 9 ஆண்டுகளில் 686. இந்த ஓராண்டில் 104 . தண்டனை
பெற்ற வழக்குகள் 119 இந்த ஓராண்டில் 9. போதை பொருள் வழக்குகளுக்காக அபராதம்
விதிக்கப்பட்டது. 9 ஆண்டுகளில் 21,91,000 (21 லட்சத்து 91 ஆயிரம் ) மதிப்பு.
அதில் இந்த ஓராண்டில் மட்டும் 7,28,000 (7 லட்சத்து 28 ஆயிரம்) உரிமையியல்
வழக்குகள். 9 ஆண்டுகளில் 107 ஓராண்டில் மட்டும் 11. அதில் தண்டனை பெற்ற
வழக்குகள் 96 இந்த ஓராண்டில் 9. போதை பொருள் விற்பனைக்காக சீல் வைக்கப்பட்ட
கடைகள் 75 ஒராண்டில் மட்டும் 44 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொகைன், ஹெராயின், கஞ்சா, பார்மா டிரக்ஸ் போன்ற பல்வேறு மருந்துகளுக்கு தடை
விதித்து பெரிய அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதை பொருள்கள்
இல்லாத நிலையில் தமிழகத்தை மாற்ற முதலமைச்சர் எடுக்கும் முயற்சியில் எதிர்கால
தலைமுறையினர் மிகவும் பயனடைவார்கள் என்று கூறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.