வடமாநில அமைச்சரின் மிரட்டலுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நகைச்சுவையாக பதில் சொன்னதை இயக்குநர் பாண்டியராஜன் நினைவு கூர்ந்தார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், அமைச்சரவையில் சிறப்பான அமைச்சர் சேகர்பாபு என கூறினார். நகைச்சுவையினையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையும் பிரிக்க முடியாது என்றார்.
குறளொவியத்தில் நடிக்க வேண்டும் என்று கருணாநிதி சொன்னார். அப்போது நடித்த பின்னர் அவர் அதனை பார்த்து என்னை கண்டித்தார். அதன் பின் வல்லினம் , மெல்லினம்
தெரியாதா என்று கேட்டார். அப்படி நா என்ன என்று கேட்டேன் அவர் உடனே இது தெரியாதா என்று கேட்டு எளிமையாக எனக்கு புரியும் படி எழுதி நடிக்க வைத்தவர் தான் கருணாநிதி என நினைவு கூர்ந்தார்.
எனது நிச்சயதார்தத்திற்கு கருணாநிதியும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டதாக கூறிய அவர், எனது மாமனார் என்னை வைத்து எடுத்த நெற்றி அடி படத்தை கருணாநிதி பார்த்துவிட்டு எனது நடனத்தை பாராட்டினார் என்றார்.
மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடுக்கு யாராவது ஆதரித்தால் தலையே இருக்காது என்று வடமாநில அமைச்சர் சொன்ன போது, இதனை ஆதரித்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர், அப்போது கருணாநிதி எனது தலையை நான் சீவி 25 வருடம் ஆகிறது என்று நகைச்சுவையாக சொன்னார் என இயக்குநர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








