ராகுல்காந்தியின் பதவி பறிப்பைக் கண்டித்து சென்னை திருவொற்றியூரில் காங்கிரஸ் கட்சியின் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசென்னை கிழக்கு மாவட்டம் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சென்னை திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் அருகே தபால் நிலையம் அருகில் போராட்டம் நடத்தப்பட்டது.
அதில், 100 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தங்களது எதிரப்பை தெரிவிக்கும் வகையில் கண்களில் கருப்பு ரிப்பன் துண்டுகளை கட்டி கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் முழங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
—ம. ஶ்ரீ மரகதம்







