திருமயம் அருகே மருந்துக்கடை நடத்தி வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டியை சேர்ந்தவர்
மதுசூதனன். மருந்தாளுனர் பட்டய படிப்பு படித்துள்ள இவர் நச்சாந்துபட்டியில்
இருந்து விராச்சிலை சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு
எதிர்புறத்தில் மருந்து கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், அவர் பொது மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக கோட்டூர் கிராம நிர்வாக அலுவலர் சிவசக்திக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலர் சிவசக்தி நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அடுத்து, மசுசூதனன் நடத்திய மருந்து கடைக்கு சென்ற காவல் துறையினர் அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மதுசூதனனை கைது செய்தனர். அவரிடம் இருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்த காவலர்கள் அவரை திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருமயம் கிளை சிறையில் அடைத்தனர்.
—-ம.ஶ்ரீ மரகதம்