திருமலை நாயக்கர் கல்லூரியில் உலக நலன் காப்பதற்காக திருவிளக்கு பூஜை!

மதுரை, பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், உலக நலன் காப்பதற்காக மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மதுரை, பசுமலை மன்னர் திருமண நாயக்கர் கல்லூரியில் இன்று ஜே. அனுஷா தேவி அறக்கட்டளை…

மதுரை, பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர்
கல்லூரியில், உலக நலன் காப்பதற்காக மாபெரும் திருவிளக்கு
பூஜை நடைபெற்றது.

மதுரை, பசுமலை மன்னர் திருமண நாயக்கர் கல்லூரியில் இன்று ஜே. அனுஷா
தேவி அறக்கட்டளை சார்பாக, 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலகத்தில்
நடக்கும் பல்வேறு பிரச்சனைகளை உலகத்தை விட்டு விலகி, உலக நலன்
வேண்டியும் 1008 கல்லூரி மாணவிகள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
இந்த குத்து விளக்கு பூஜையை, மதுரை மேயர் இந்திராணி தொடங்கி வைத்தார்.

நாடு செழிக்கவும், உலக அமைதி நிலவிட மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரும் உயர்ந்த ஞானம், உயர்ந்த அறிவு, சந்தோசம் பெற்றிட வேண்டும் என்று திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட மன்னர் கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.