திருவள்ளூர் மாவட்டம், கரடி புத்தூர் கிராமத்தில் தாமதமாக இயக்கப்படும் அரசு பேருந்தால், குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தில்,
அரசு பேருந்து தினந்தோறும் காலதாமதமாக வருவதால், பள்ளிக்கு உரிய நேரத்தில்
செல்ல முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்து மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுடன் இணைந்து, பேருந்தை கரடி புத்தூரில் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்து உரிய நேரத்தில் வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால்,
பேருந்தை விடுவிக்க மாட்டோம் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பாதிரிவேடு காவல்துறையினர், சமரசம் மேற்கொண்டதை
அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கு. பாலமுருகன்







