திருவாரூரில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவு!

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை…

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கோடை சாகுபடி பயிர்கள் குறித்து கணக்கெடுக்க வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு
மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 20 ஆயிரம் ஏக்கர்
பரப்பளவில் பருத்தி மற்றும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எள் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் வரும் மே 15 முதல் திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட
கோடை பயிர்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி எந்தவித பாரபட்சமுமின்றி கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணத்தை
பெற்றுத் தர மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.