குடும்பத் தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்
தொழிலாளி மாதவன் (40). இவர் மனைவி அய்யம்மாள் (35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
மாதவன் குடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யம்மாள் தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மனைவி வீட்டுக்கு சென்ற மாதவன் வழக்கம் போல் தகராறு செய்து அங்கேயே தூங்கியுள்ளார். அப்போது கோபத்தில் இருந்த அய்யம்மாள் தூங்கி கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மாதவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ம. ஶ்ரீ மரகதம்
File.AMS Veerava nallur Husband – Wife Fight 24.05.23







