முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரு நாள் சுற்றுப் பயணத்தை தொடங்கினார் சசிகலா

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பேசுபொருளாக மாறி இருக்க கூடிய சூழ்நிலையில் தொண்டர்களை சந்திப்பதற்காக தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளார் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா.

பட்டாசு வெடித்தும், மாலைகள் மற்றும் பூங்கொத்து கொடுத்தும் தொண்டர்கள்
சசிகலாவை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். தனது தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்ட சசிகலா கோயம்பேடு, பூந்தமல்லி,
திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா திருத்தணி,
குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொண்டர்களையும், பொது மக்களையும்
சந்திக்கிறார். குண்டலூரில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், K.G.கண்டிகை, S.V.G.புரம், கிருஷ்ணாகுட்பம், R.K.பேட்டை ஆகிய இடங்களில் உள்ள
தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார்.

R.K.பேட்டையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின்
திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு,
அம்மையார்குப்பம் சென்று அங்குள்ள கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் தியாகராய நகர் இல்லம்
வந்தடைகிறார்.

சசிகலாவை தி.நகர் இல்லத்தில் சந்தித்த பிறகு சி ஆர் சரஸ்வதி அளித்த பேட்டியில், ” அனைவரையும் ஒன்றிணைத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதே சசிகலாவின் நோக்கம். தற்போது இந்த பயணம் தொண்டர்களை ஒன்று இணைப்பதற்கான பயணம்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை மேயர் பிரியாவின் போட்டோவை பயன்படுத்தி மோசடி முயற்சி

Web Editor

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீர் நிலைகள் மீட்டெடுக்கப்படும்! – கமல்ஹாசன்

Jayapriya

முடிவடைந்தது மீன்பிடி தடைக்காலம் – மீனவர்கள் உற்சாகம்

Web Editor