முக்கியச் செய்திகள் தமிழகம்

அம்பேத்கர் சுடர் விருது :முதலமைச்சரை நேரில் அழைத்த திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2021-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட உள்ளதைத்தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து எம்.பி திருமாவளவன், வரும் 24ம் தேதி நடைபெறும் விருது விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் திறமை வாய்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது எம்.பி வைகோவிற்கும், காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், செம்மொழி ஞாயிறு விருது செம்மொழி க.இராமசாமிக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் விழா டிசம்பர் 24-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து எம்.பி திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் பேசியதாவது: ”பாமக எந்த சமூகத்திற்காக பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்களோ அதே சமூகம் பொதுவெளியில் வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். தலைவர்களே இது போன்ற செயல்களைச் செய்கிறார்கள். இதனால் சமூக பதட்டம் ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. இது தவிர்கப்பட வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

ஜெய்பீம் தொடர்பாக பெரிய நடிகர்கள் குரல் கொடுக்கவில்லையே என்ற கேள்விக்கு, இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என உச்ச நட்சத்திரங்களின் எண்ணமாக இருக்கலாம் என திருமாவளவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 81.64 சதவீத வாக்குகள் பதிவு!

Halley Karthik

ஐபிஎல் இறுதி ஆட்டம்-குஜராத்துக்கு 131 ரன்கள் இலக்கு

EZHILARASAN D

விக்ரம்-2: ரசிகர்களை கவரும் விளம்பரம்

G SaravanaKumar