அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, சமீபத்தில் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கியது. இந்நிலையில், அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பவானி தேவி , தமிழ்நாட்டில் இருந்து அர்ஜூனா விருது பெறுவது பெருமையாக உள்ளதாக கூறினார். உறுதுணையாக இருந்த முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் பவானி தேவி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் பேசிய அவரது தாய் ரமணி “ பவானி சாதனைகள் புரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடுமையாக உழைத்ததால் சாதித்தாள், அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கத்துடன் இந்தியாவிற்கு வருவாள்” என்று அவர் கூறினார்.