கர்நாடகாவில் காங்கிரஸை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம்; பாஜக தோற்றால், 2024 தேர்தலிலும் எதிரொலிக்கும் என பேச்சு

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி…

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : மனோபாலா மறைவு – திரைப் பிரபலங்கள் இரங்கல்..!

அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

https://twitter.com/thirumaofficial/status/1653695593221611521?t=kRucP7UTgA6sSmlhFJsZrQ&s=08

தேர்தல் பரப்புரையின்போது பேசிய அவர், “மக்களின் அடிப்படை வசதிகள் பற்றி பேசாமல் மதத்தை மட்டும் பேசி பாஜக மக்களிடையே வெறுப்பை, பிரிவினையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ளதால், அவர்களால் காலூன்ற முடியவில்லை. கர்நாடகா தேர்தலில் பாஜக தோற்றால், அது 2024 மக்களவைப் பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கும். மோடியை வீட்டுக்கு அனுப்பும் சூழ்நிலையை உருவாக்கும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.