கன்னியாகுமரி மாவட்டம் பிணந்தோடு அருகே அனுமதியின்றி செயல்படும் பன்றி பண்ணையை அகற்ற கோரி திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பிணந்தோடு
சிறக்குளத்தின்கரை பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ். மருத்துவரான இவர்
அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அனுமதி இன்றி பன்றி பண்ணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கேரளாவில் இருந்து உணவு கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால்
அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும்,
தொற்று நோய்கள் வருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இதனை தொடர்ந்து, பிணந்தோடு பகுதி பொதுமக்கள் திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, பேரூராட்சி தலைவர் ரவி மற்றும் செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு நாட்களில் பன்றி பண்ணையையும் அப்புறபடுத்துவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது .
—-ம. ஶ்ரீ மரகதம்







