சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார். சென்னை மெரினாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.…

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என நடிகரும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

சென்னை மெரினாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் திரைப்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர், அங்குள்ள அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நினைவிடத்தில் மனுக்களை வைத்து வழிபட்டனர். அந்த மனுவில், தமிழக திரைத்துறையில் உள்ளாட்சி வரியைக் குறைக்க வேண்டும் மற்றும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், “கொரோனா காலக்கட்டத்தில் திரைத்துறையை காப்பாற்ற அண்டை மாநிலங்களில் ஜிஎஸ்டி, உள்ளாட்சி வரியை நீக்கியுள்ளது போல் தமிழகத்திலும் நீக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மூன்றாவது அணி உருவாகும் என்றும், மாற்று அணி உருவாக்கினால் அது சில பேருக்கு வேட்டு அணியாக மாறிவிடும் என்றும் நடிகர் டி.ராஜேந்தர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply