கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றவில்லை என்றால், கொரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார். அடுத்த ஆறு அல்லது எட்டு வாரங்களில் மூன்றாவது அலை, இந்தியாவைத் தாக்கும் என்றும் ஒவ்வொருவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெரும்பாலான மாநிலங்கள் லாக்டவுனில் இருந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றன என்றும் மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை என்றும் அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி நேரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுவதாகக் கூறியுள்ள ரன்தீப் குலேரியா, தடுப்பூசி செலுத்துவது பெரிய சவால் என்றும் இதுவரை மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 5% பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்பதாகவும் கூறினார்.