சிவகளையில் நடைபெற்றுவரும் அகழாய்வில், தாமிரபரணி கரையோரத்தில் அக்கால மக்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில், இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அவற்றில் இருந்து 30க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது, தாமிரபரணிக்கரை வாழ்விடங்களை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகளை அருகேயுள்ள பொட்டல் திரடு, ஆவாரங்காடு திரடு, உட்பட 6 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளன.







