மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடாத பாலங்களின் பணிகளால், மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக திராவிடன் அறக்கட்டளை நிறுவனர் கோவை பாபு குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி…

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடாத பாலங்களின் பணிகளால், மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக திராவிடன் அறக்கட்டளை நிறுவனர் கோவை பாபு குற்றம்சாட்டி உள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி வாகை சூடவைப்போம் என்று சூளுரைத்து, திராவிடன் அறக்கட்டளை அமைப்பினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.கிருஷ்ணனுக்கு ஆதரவாக அவர்கள் வாக்கு சேகரித்தனர். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களை வாக்காளர்களிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். அப்போது பேசிய அந்த அமைப்பின் நிறுவனர் கோவை பாபு, குடிதண்ணீரை சூயஸ் எனும் தனியாருக்கு அதிமுக அரசு தாரைக் வார்த்து கொடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.